தென்னாப்பிரிக்காவில் தீ விபத்து : 52 பேர் உயிரிழப்பு!
#Accident
#world_news
#Lanka4
#SouthAfrica
Thamilini
2 years ago
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்றும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் சரியாக தெரியவரவில்லை எனக் கூறப்படுகிறது.
அவசரகால சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி பிபிசியிடம், தீயணைப்பு வீரர்கள் சிலர் தீயை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உயிரிழந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.