உகாண்டாவில் 200 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க அதிபர் உத்தரவு
#PrimeMinister
#Court Order
#world_news
#2023
#Tamilnews
Mani
2 years ago
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் அதிபர் யோவேரி முசெவெனி மனிதாபிமான அடிப்படையில் 200 சிறை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்க உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து நாட்டின் சிறை கைதிகள் நல அதிகாரி ஒருவர் கூறியதாவது, நாட்டில் உள்ள சிறைகளில் 72 ஆயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு உள்ள கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் கைதிகளை தேர்ந்தெடுந்து மன்னிப்பு வழங்க அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கான ஒப்புதலையும் அதிபர் அளித்துள்ளார்.
அதன்படி 1800 கைதிகள் பட்டியலில் இருந்து 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றார். கடந்த 2021-ம் ஆண்டு அதிபர் யோவேரி முசெவெனி ஒப்புதலின் பேரில் பொதுமன்னிப்பு கொடுத்து 800 சிறை கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.