இலங்கையின் அபிமானத்தை பாதுகாக்க நம்பகத்தன்மையை தக்க வைக்க வேண்டும்!
ஒரு நாடு என்ற வகையில் நிலைத்தன்மை, நம்பகத்தன்மையையுடனான விம்பத்தை தக்கவைத்துக் கொள்வதன் ஊடாக உலகில் இலங்கையின் அபிமானத்தை பாதுகாக்க முடியும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அண்மைய உயர் நிலை சுற்றுப்பயணங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தின் நோக்கு’ என்ற தலைப்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சிகளின் போது, டிஜிட்டல் நிதியியல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார். இந்து சமுத்திர வலயத்தின் ஒற்றுமைக்கான வலுவான வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதால் இந்து சமுத்திரத்தின் வர்த்தக பாதைகளிலிருந்து உலக தொடர்பாடல்கள் வரையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முறைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
ஒவ்வொரு நாடுகளினதும் தேசிய தேவைப்பாடுகள் சர்வதேச கட்டமைப்பக்குள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வலயத்தின் கடல்சார் பாதுகாப்பு, கடல் அடிவாரத்தில் உள்ள இணைய கேபிள்களைப் பாதுகாத்தல், சட்டவிரோதமானது மீன்பிடித்தல் மற்றும் ஆள்கடத்தலுக்கு தீர்வு, கடல் மாசை மட்டுப்படுத்துதல், சுற்றாடல் பிரச்சினைகளை தீர்த்தல், இடர் நிவாரண சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் திறந்த இந்து-பசிபிக் வலயத்தை மேம்படுத்துவதற்கான இலங்கையின் மத்தியஸ்த கொள்கைகளில் ஒன்றாகும்.
மனிதாபிமான மற்றும் அனர்த்தங்களின் போதான நிவாரணங்கள் (HADR) வழங்குதல் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்களை கருத்தில் கொண்டு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் போது, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை அடைந்துகொள்ள முடியும். இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் தனித்துவமான மைல்கல் இலக்கு என மேற்படி முற்சிகளை குறிப்பிடலாம். கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஆரம்ப கட்டங்களில், இலங்கை சர்வதேச பங்குதார்களிடத்தில் உத்தரவாதத்தை கோரியிருந்தது. பெரிஸ் சமவாயத்துடன் இணைந்து இந்தியாவும் சீனாவும் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தன.
பிரதான பங்குதாரர்களின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை எதிர்பார்க்கிறது. காலநிலை மாற்றங்களுக்கு எதிரான செயற்பாடுகளில் பிரான்ஸின் பங்களிப்பு மற்றும் வலயத்தின் சமுத்திர பாதுகாப்பை கருத்திற் கொண்டு, திருகோணமலையை தளமாக கொண்ட பாதுகாப்புப் கல்லூரி ஒன்றை நிறுவுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அதற்கு மேலதிகமாக பொருளாதார அபிவிருத்தியின் போது தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக வேலைத்திட்டம் உட்பட இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீன முதலீடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் உணவு உற்பத்தியில் தன்னிறைவை உறுதி செய்தல் மற்றும் இறக்குமதியின் மீது சார்ந்திருப்பதைக் குறைப்பதே நோக்கமாக காணப்படுகிறது.
சீன-இலங்கை உறவுகளைப் பொறுத்தவரை, சீனாவின் குறிப்பிடத்தக்க இரண்டு முதலீடுளில் ஒன்றான துறைமுக நகரத் திட்டத்திற்கு அவசியமான புதிய நீதி கட்டமைப்பை தயாரிப்பதற்கான ஆசோலனைகள் சவால்களுக்கு மத்தியிலும் கோரப்பட்டுள்ளது. இந்த சட்ட ரீதியான செயற்பாடுகள் எதிர்கால முதலீடுகளை கவரும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது