சுவிட்சர்லாந்தில் நீண்ட காலம் தொழில் புரிவதற்கான அடையாள அட்டை பெறல்

#Switzerland #swissnews #Lanka4 #சுவிஸ் செய்தி #சுவிட்சர்லாந்து #லங்கா4 #சட்டம் #சுவிஸ் #Swiss Law #Tamil News #Swiss Tamil News
Mugunthan Mugunthan
8 months ago
சுவிட்சர்லாந்தில் நீண்ட காலம் தொழில் புரிவதற்கான அடையாள அட்டை பெறல்

நீண்ட காலத்திற்கு சுவிஸில் வாழ்ந்து வேலை செய்வதாயின் ஒரு அனுமதிப்பத்திரம் தேவை. பல தரப்பட்ட வதிவிட உரிமைகளுக்கும் நிரந்தர வதிவிட உரிமைக்கும் வித்தியாசங்கள் உண்டு.

 அனுமதி வகைகள்

 எவர் சுவிஸில் தங்கியுள்ள காலப்பகுதியில் வேலை செய்கிறாரோ அன்றி 3 மாதத்திற்கு மேல் தங்குகிறாரோ அவருக்கு ஒரு அனுமதி தேவைப்படுகிறது.

 சுவிஸில் தங்கியிருப்பது பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாக குடியிருப்பு கிராமசபை உள்ளது.

 அது குடியேறல் சேவைக்கு குடியிருப்பு அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புகிறது. அவர்கள் அந்த விண்ணப்பம் பற்றி முடிவு செய்கிறார்கள். இவற்றில் குறுகியகாலத் தங்குமிட அனுமதி (1 வருடம் வரை), தங்குமிட அனுமதி (பிராஜாவுரிமையை பொறுத்து மட்டுப்படுத்தப்பட்ட 1 அல்லது 5 வருட கால எல்லையுடன்) மற்றும் நிரந்தர வதிவிட உரிமை (காலவரையற்றது) மற்றும் எல்லைகடந்து வேலை செய்பவர் அனுமதிப்பத்திரம் வரை வித்தியாசப்படுகிறது. 

 குறுகியகால வதிவிடஉரிமை L(அடையாள அட்டை L) இந்த அனுமதி உள்ளவர்கள் குறிப்பிட்ட கால எல்லை வரை (அதிகமாக 1 வருடம்) ஒரு குறிப்பிட்ட காரணத்தையிட்டு சுவிஸில் வாழலாம். 

அதிகமான EU/EFTA நாட்டுப் பிரஜைகள் வேலை வாய்ப்புக் கிடைத்தால் 3 மாதம் முதல் ஆதாரத்துடன் (வேலைஒப்பந்தம்)1 வருடம் வரை இருக்கலாம். வதிவிட உரிமை B (B அடையாளப்பத்திரம் ) இந்த அனுமதி உள்ளவர்கள் நீண்ட காலம் சுவிஸில் தங்கலாம். 

EU/EFTA நாட்டுப் பிரஜைகள் தமக்கு 1 வருடத்திற்கு மேற்பட்ட வேலைஒப்பந்தம் உள்ளது என ஆதாரம் காட்டினால் அவர்கள் 1 வருடத்திற்கு மேலாக வேலை செய்ய முடியும். EU/EFTA நாட்டுப்பிரஜைகளிற்கான அனுமதி 5 வருடங்களிற்கு வழங்கப்படுகிறது.

 மற்றைய நாட்டவர்களுக்கு 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது. அதன்பின்பு அவர்கள் விசா நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விசா நீடிப்பு எதாவது நிபந்தனைகளையொட்டி கிடைக்கலாம். உதாரணமாக டொச் வகுப்புக்குப் போதல். சில சமயம் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அல்லது நலன்புரி விடயங்களில் மற்றவரைச் சார்ந்திருந்தால் வர வேண்டிய விசா நீடிப்புத் தடைப்படலாம்.

 அங்கீகரிக்கப்பட்ட அகதிகளுக்கும் B வதிவிட அனுமதி கிடைக்கும். நிரந்தர வதிவிட அனுமதி C (C அடையாளப்பத்திரம் ) சுவிஸில் தொடர்ந்து 5 அல்லது 10 வருடங்கள் கடந்து தொடர்ந்து வசித்தால் இந்த அனுமதி கிடைக்கும். இங்கேயும், EU / EFTA நாடுகள் மற்றும் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது.

 தஞ்சம் வழங்கும் பகுதியில் அனுமதி:

 - தஞ்சம் கோருவோர் (N-அடையாளப்பத்திரம்)

 - தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் (F-அடையாளப்பத்திரம்)

 - தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட அகதிகள் (F-அடையாளப்பத்திரம்)

 - புகலிடம் அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் (B-அடையாளப்பத்திரம்).

 வெளிநாட்டவர் அடையாளஅட்டை

 சுவிஸில் வதியும் வெளிநாட்டவர்கள் வெளிநாட்டவர்களுக்குரிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வார்கள். அடையாள அட்டையின் வகை பல்வேறு நிபந்தனைகளைப் கொண்டுள்ளது. கிரெடிட் கார்டு வடிவத்திலும் மற்றும் காகிதத்தால் செய்யப்பட்ட (உயிரியல் அடையாளங்கள் அற்ற வெளிநாட்டினர்) அடையாள அட்டைகள். (உயிரியல் அடையாளங்கள் அற்ற வெளிநாட்டினர் அடையாள அட்டைகள், Nicht biometrischer Ausländerausweis). சிலர் ஒரு உயிரியல் அடையாளங்கள் உள்ள வெளிநாட்டினர் அடையாள அட்டைகளை பெறுவர். 

இந்த அடையாள அட்டையில் உள்ள ஒரு தரவு அட்டையில் விரலடையாளமும் படமும் கையொப்பமும் சேர்க்கப்பட்டிருக்கும். உரிய தனிநபர்கள் புலம்பெயர் சேவையிலிருந்து ஒரு அழைப்பினைப் பெறுவார்கள். 

அதன் பிறகு, இவர்கள் தம் உயிரியல் தரவுகளை பேர்ண் மாநில கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை பிரிவில் பதிய வைக்க வேண்டும். இங்கு தாமே அதற்கான நேரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து அடையாள அட்டைகளையும் வாழிட கிராமசபையில் பெற்றுக் கொள்ளலாம். அடையாள அட்டை தொலைந்தால் அல்லது களவாடப்பட்டால் உடனே பொலிஸில் முறையிடவும்.

 நீடிப்புச் செய்தல்

 தேசிய இனத்தைப் பொறுத்தும் தங்கும் நிலையைப் பொறுத்தும் வதிவிடஉரிமை வித்தியாசமான கால இடைவெளிகளில் நீடிப்புச் செய்து கொடுக்கப்படும். நீடிப்புச் செய்யவேண்டிய காலத்தில் ஒரு பத்திரம் வரும் (Verfallsanzeige | avis de fin de validité) அதை நிரப்பி அதனுடன் பாவிக்கக்கூடிய கடவுச்சீட்டையும் சேர்த்து வதிவிட அனுமதி முடிவதற்கு 2 கிழமைகளுக்கு முன்பே வதியும் கிராமசபையில் கையளிக்க வேண்டும்.

 அவர்கள் தொடர்ந்து குடிமக்கள் சேவை திணைக்களத்திற்கு (ABEV | OPOP) அனுப்புவார்கள். அங்கு நீடிப்புச் செய்வதற்குரிய தகைமைகள் சோதிக்கப்படும். ஏதாவது வினாக்களிருப்பின் அதுபற்றி கிராமசபை அல்லது குடிமக்கள் சேவை திணைக்களம் (ABEV | OPOP) தெரிவிக்கும்.