ஆபத்தான ஆயுதத்தை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா!
உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய ‘யுரேனிய சக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை அளிக்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் ஐ.நா. சிறப்பு அதிகாரி அலைஸ் ஜில் எட்வா்ட்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அமெரிக்க அரசுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், ரஷியாவுடனான போரில் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு யுரேனிய சக்கையால் உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை அனுப்பும் முடிவை அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்தகைய ஆயுதங்களைப் போரில் பயன்படுத்துவது இராணுவ வீரா்கள் மட்டுமின்றி அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும் எனவும், போா் முடிந்த பிறகும் கூட அந்த ஆயுதங்களால் பொதுமக்களுக்கு ஆபத்து நீடிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, யுரேனிய சக்கையால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தவே கூடாது என்று அவர் குறித்த கடித்தில் எச்சரித்துள்ளார்.