6 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சுகாதார ஊழியர்கள் போராட்டம்
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதான வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் இன்று (22ஆம் திகதி) நண்பகல் 12.00 மணி தொடக்கம் 1.00 மணிவரை ஒன்றிணைந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு சுகாதார ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், சிவில் மத மற்றும் வர்த்தக அமைப்புகளும் ஆதரவளிக்கவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.
அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை, சுகாதார ஊழியர் பற்றாக்குறை, தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்தல், சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமை, அதிவேக மனநலம் குன்றிய பிள்ளைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் மருந்துகளை வழங்காமை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.