திருகோணமலையில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை! நீதிமன்றம் உத்தரவு

#SriLanka #Sri Lanka President #Trincomalee
Mayoorikka
1 year ago
திருகோணமலையில் திலீபனின் நினைவேந்தலுக்கு  தடை!  நீதிமன்றம் உத்தரவு

திலீபனின் நிகழ்வுக்கு தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (26) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டான் மண்டபம், காந்தி சுற்றுவட்டம் மற்றும் திருகோணமலை பொலிஸ் பிரதேசம் ஆகிய இடங்களில் திலீபனின் நினைவு தின நிகழ்வுகள், அணிவகுப்புகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திருகோணமலை துறைமுக பொலிஸாரால் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!