மிதுன ராசியினருக்கு தடைபட்டிருந்த செயல் நடந்தேறும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
8 months ago
மிதுன ராசியினருக்கு தடைபட்டிருந்த செயல் நடந்தேறும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். பரணி : நீங்கள் திட்டமிட்டிருந்த வேலையில் குழப்பம் தோன்றும். வேலைகளால் நெருக்கடி அதிகரிக்கும். கார்த்திகை 1 : பழைய பிரச்னை ஒன்றை சரி செய்வீர். சமுதாயத்தில் செல்வாக்கு கூடும். வரவு அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். தவறான நட்பினால் சில பிரச்னைகளை சந்திக்க நேரும். ரோகிணி : வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மிருகசீரிடம் 1,2: வேலை பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் நெருக்கடி இருக்கும். போராடி வெற்றி பெற வேண்டிய நாள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : வியாபாரத்தில் தடை தோன்றும். நண்பர்கள் உதவியால் ஒரு முயற்சி நிறைவேறும். திருவாதிரை : தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். தடைபட்டிருந்த செயல் நடந்தேறும். புனர்பூசம் 1,2,3 : குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.

கடகம்

புனர்பூசம் 4 : தொழிலில் மாற்றம் செய்ய முயற்சிப்பீர். பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். பூசம் : இழுபறியாக இருந்தவற்றில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வரும். ஆயில்யம் : வியாபாரத்தில் தேக்கம் ஏற்படும். பொருள்களை விற்பனை செய்ய புதிய வழிமுறையை உருவாக்குவீர்கள்.

சிம்மம்

மகம் : திட்டமிட்டிருந்த செயல் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். பூரம் : பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். பெரியோர் ஆலோசனையால் அதற்கு தீர்வு காண்பீர்கள். உத்திரம் 1 : திட்டமிட்டு செயல்படுவீர். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். மனதில் பதட்டம் அதிகரிக்கும். உறவுகளால் சங்கடம் சந்திப்பீர்கள். அஸ்தம் : அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வடையும். எதிர்பார்த்த ஆதாயத்தில் தடை உண்டாகும். சித்திரை 1,2 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டி வரும் நாள்.

துலாம்

சித்திரை 3,4 : உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வார். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். சுவாதி : உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். தடைபட்டிருந்த முயற்சியில் வெற்றி காண்பீர். கனவு நனவாகும். விசாகம் 1,2,3 : குறுக்கு வழியில் ஆதாயம் அடைய ஒரு சிலர் வழிகாட்டலாம். அதனால் சிக்கல் தோன்ற வாய்ப்புண்டு.

விருச்சிகம்

விசாகம் 4 : உங்களிடம் நன்றாக பழகியவர்களே உங்களுக்கு எதிரியாவார். தொழிலில் போட்டி அதிகரிக்கும். அனுஷம் : மறைமுக எதிர்ப்புகளை சரி செய்வீர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். கேட்டை : வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். யாரிடமும் இன்று உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம்.

தனுசு

மூலம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். எதிர்பார்த்த பணம் வரும். பூராடம் : உறவினர்களால் சில சங்கடம் ஏற்படும். சொத்து விவகாரம் குறித்த பேச்சு இழுபறியாகும். உத்திராடம் 1 : தொழிலில் உங்கள் செயல் லாபமடையும். பிள்ளைகள் உதவியால் ஒரு முயற்சி நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : ஒரு சிலர் உங்களை தவறான வழியில் அழைத்துச் செல்ல முயற்சிப்பர். சங்கடம் தோன்றும். திருவோணம் : திட்டமிட்டிருந்த செயல் வெற்றியாகும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். மனக்குழப்பம் நீங்கும். அவிட்டம் 1,2 : புதிய முயற்சி இழுபறியாகும். தாய்வழி உறவுகளால் சில நெருக்கடிகளுக்கு ஆளாவீர்.

கும்பம்

அவிட்டம் 3,4 : எதிர்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் சில சங்கடம் தோன்றும். பொருளாதார நெருக்கடி உண்டாகும். சதயம் : குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். வாழ்க்கைத் துணையால் உங்கள் விருப்பம் நிறைவேறும். பூரட்டாதி 1,2,3 : நீங்கள் ஈடுபடும் செயலில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகும். கவனம் தேவை.

மீனம்

பூரட்டாதி 4 : உறவினர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். உத்திரட்டாதி : உங்கள் விருப்பம் நிறைவேறும். பண வரவில் இருந்த தடை விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். ரேவதி : வெளியூர் பயணத்தில் சில சங்கடம் தோன்றும். மனக்குழப்பத்தை தவிர்ப்பது நல்லது.