பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்; நிவாரணம் அறிவித்தது ரயில்வே

#India #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews #NarendraModi
Mani
1 year ago
பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்; நிவாரணம் அறிவித்தது ரயில்வே

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இதற்கிடையே, ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ரயில் விபத்து எதிரொலியாக, அந்த வழியாக செல்லும் பாட்னா-பூரி எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தில்பர்க் எக்ஸ்பிரஸ், பரவ்னி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 21 ரெயில்கள் ரயில்கள் வெவ்வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் தடம் புரண்டதில் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

பீகாரில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!