மிகத்தீவிர புயலாக உருவெடுக்கும் ’தேஜ்’ புயல்; வானிலை ஆய்வு மையம் தகவல்
கடந்த 19ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே நாளில் நள்ளிரவில் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவான புயலுக்கு 'தேஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. புயல் மேலும் தீவிரமடைந்து ஓமன் மற்றும் ஏமன் இடையே வரும் 25ம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ‘தேஜ்’ புயல் இன்று வலுவடைந்து தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை மறுநாள் அதிகாலை ஓமன் மற்றும் ஏமனுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.