தைவான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாகை சூடிய வில்லியம் லாய் : ட்ராகனை அசைத்து பார்ப்பாரா?

#SriLanka #China #Election #Lanka4 #President #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
10 months ago
தைவான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாகை சூடிய வில்லியம் லாய் : ட்ராகனை அசைத்து பார்ப்பாரா?

தைவானின் புதிய ஜனாதிபதியாக ஆளும்  ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வில்லியம் லாய் சிங்-தே பதவியேற்கவுள்ளார். 

தேர்தல் வெற்றிக்குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், நாங்கள் ஜனநாயகத்தை எவ்வளவு போற்றுகிறோம் என்பதை உலகுக்கு காட்டுகிறோம். உலகின் ஜனநாயக நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம். எனத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் மறைமுகமாக சீனாவை சாடிய அவர், இந்த தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் வெளி சக்திகளின் முயற்சிகளை தைவான் மக்கள் வெற்றிகரமாக எதிர்த்துள்ளனர்" எனவும் கூறினார். 

லை சிங்-தே ஜனாதிபதித் தேர்தலில் 40.2 சதவீத வாக்குகளைப் பெற்றதாக புள்ளிவிரபங்கள் காட்டியுள்ளன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹூ யு-இஹ் 33.4 சதவீத புள்ளிகளை பெற்று பின்தங்கினார். 

தைவானிற்கும் - சீனாவிற்கும் இடையில் பனிப்போர் இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

சீனா தைவானை தன்னுடைய ஒருங்கிணைந்த பகுதியாக கருதுகிறது. ஆனால் தைவானோ, தங்களை தனிநாடு என பிரகடனப்படுத்திக் கொண்டது. எவ்வாறாயினும், ஆயுதபலத்தின் மூலமாகசரி தைவானை அடிப்பணிய வைக்க வேண்டும் என்பதுதான் சீனாவின் இலக்கு. 

இதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார் என சீன ஜனாதிபதி அண்மையில் கூறிய கருத்து நினைவிருக்கலாம். இதற்கமைய தைவான் ஜலசந்தி பகுதியில் போர் பதற்றம் நீட்டித்து வருகிறது. எப்பொழுதுவேண்டும் என்றாலும், தைவான் மீது சீனா போர் தொடுக்கலாம் என்ற ஒரு ஐயப்பாடு நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. 

ஏற்கனவே இருபோர்கள் உலக மக்களின் அமைதியை சீர்குலைத்திருக்கின்ற நிலையில், தற்போது மூன்றாவதாக ஆசியாவில் ஒரு போர் வெடிக்குமானால் அது மக்களின் மனங்களை அசைத்து பார்த்துவிடும். அதுமட்டுமல்லாமல், உயிரிழப்புகளுடன் சேர்ந்து பொருளாதாரமும் ஆட்டம் காணும், போர் மாத்திரம் அன்றி பசியினாலும், பஞ்சத்தினாலும், பலர் மடிவார்கள். அதேநேரம் மற்ற நாடுகளுக்கு மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் போது ஏற்கனவே அந்த நாடுகளில் தங்கியுள்ள மக்களின் நிலைமை மோசமாகும். இப்படி பலப் பிரச்சினைகள் காத்திருக்கின்றன. 

இதற்கிடையில் தற்போது தைவான் தேர்தலில் வெற்றிப்பெற்றிருக்கும் லாய், சீனாவிற்கு சவாலாக விளங்குவார் என்றே நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம் தேர்தல் வாக்குறுதிகளில் பிரதானமானது தைவானின் பாதுகாப்பு விடயம்தான். இதனை பிரதிநிதித்துவப்படுத்திதான் அவர் ஆட்சிக்கும் வந்துள்ளார். ஆக வரும் நாட்களில் தைவான் - சீனா இடையிலான போர் பதற்றம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!