டிரம்பிற்கு நியூயார்க் நீதிமன்றம் விதித்த உத்தரவு

#Court Order #America #President #Trump #Ex #lanka4Media #lanka4.com
Prasu
10 months ago
டிரம்பிற்கு நியூயார்க் நீதிமன்றம் விதித்த உத்தரவு

1851லிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு செயல்படும் பிரபல தின பத்திரிக்கை, தி நியூயார்க் டைம்ஸ் . உலகெங்கிலும் இணைய வடிவில் சுமார் 9.41 மில்லியன் சந்தாதாரர்களும், அச்சு வடிவில் சுமார் 6,70,000 சந்தாதாரர்களும் கொண்டது இந்த தின பத்திரிகை.

2018ல், சுசன் க்ரெய்க் (Susanne Craig), டேவிட் பார்ஸ்டோ (David Barstow) மற்றும் ரஸ்ஸல் ப்யூட்னர் (Russell Buettner) எனும் அப்பத்திரிகையின் 3 புலனாய்வு செய்தியாளர்கள், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சொத்துக்கள் மற்றும் வருமான வரி செலுத்துவதில் அவர்கள் பின்பற்றும் வழக்கங்கள் குறித்து ஒரு ஆய்வு கட்டுரையை பதிவிட்டனர்.

2021ல் இதில் உள்ள கருத்துகள் தவறானவை எனும் புகாருடன் டொனால்ட் டிரம்ப் இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்.

 ஆனால், அந்த 3 பேரையும், தி நியூயார்க் டைம்ஸையும், வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது. நியூயார்க் நீதிமன்ற நீதிபதி ராபர்ட் ரீட் (Robert Reed) தனது தீர்ப்பில், டிரம்ப் $3,92,638 தொகையை வழக்கறிஞர் கட்டணமாக டிரம்ப் அப்பத்திரிகைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!