புதிய வகையான மரண தண்டனைக்கு அனுமதியளித்த அமெரிக்கா
அமெரிக்க தென்கிழக்கு மாநிலம், அலபாமா (Alabama). 1988 மார்ச் 18ல் இம்மாநில கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett), சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார்.
எலிசபெத்தின் கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார். இக்கொலையை செய்ததாக (தற்போது 58 வயதாகும்) கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், கடன் சுமையில் இருந்த சார்ல்ஸ், மனைவியின் காப்பீட்டு தொகையை பெற, இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சதி செய்திருந்ததும் தெரிய வந்தது.
ஆனால், 2022ல் கென்னத்திற்கு தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகள் கிடைக்காமல், முயற்சி கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பல கலந்தாலோசிப்பிற்கு பிறகு, "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் கென்னத்திற்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அது ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.
இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை சுமார் 15 நிமிடங்களுக்கு உள்ளே செலுத்துவார்கள் இதையடுத்து, கென்னத்திற்கு எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.
சில தினங்களுக்கு முன், "மரணத்தை விட மரண தண்டனைக்கான வழிமுறை குறித்து தெரிந்த கொள்ள காத்திருப்பது சித்ரவதையாக உள்ளது" என கென்னத் தெரிவித்திருந்தார்.
அலபாமாவில் மரண தண்டனைக்காக மட்டுமே 165 பேர் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.