கின்னஸ் சாதனை படைத்த 48 வயது போலந்து பெண்

#Women #Tamilnews #WorldRecord #Ice #Poland
Prasu
2 months ago
கின்னஸ் சாதனை படைத்த 48 வயது போலந்து பெண்

போலந்து நாட்டில் உலக சாதனைக்காக 'ஐஸ்' கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் முழு உடலுடன் நிற்கும் போட்டி நடந்தது. 

இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த 48 வயதான கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா மிக தைரியமாக பங்கேற்றார். 

அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் அவர் 6 அடி உயரமான கண்ணாடி பெட்டிக்குள் நிறுத்தப்பட்டார். அவர் மீது 'ஐஸ்' கட்டிகள் கொட்டப்பட்டது. 

அதை தொடர்ந்து கவுண்ட்டவுன் தொடங்கியது. அப்போது அவர் 'ஐஸ்' பெட்டிக்குள் 3 மணி நேரம் 6 நிமிடம் 45 செகண்ட் நின்று கின்னஸ் சாதனை படைத்தார். 

அவரை அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர். மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர் வெளியே வந்தார். 

இந்த சாதனை குறித்து கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா கூறியதாவது:- இதுபோன்ற பனிக்கட்டி தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ள எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்கு மன வலிமை, உடல் வலிமை அவசியம் தேவை. இதுபோல் மற்ற பெண்களும் தாங்கள் விரும்பும் துறைகளில் சாதிக்க முயற்சிக்க வேண்டும் என அவர் கூறினார்.