ஒரே மாதத்தில் 4வது ஏவுகணை சோதனை நடாத்திய வடகொரியா

#government #NorthKorea #Missile #Test #Ocean #2024
Prasu
2 months ago
ஒரே மாதத்தில் 4வது ஏவுகணை சோதனை நடாத்திய வடகொரியா

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. 

தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.

இந்நிலையில், வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. அந்நாட்டின் நப்ஹொ நகரில் உள்ள் கப்பல் கட்டும் தலத்தில் கட்டப்பட்டுவரும் போர்கப்பல் கட்டும் பணிகளை அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வு நடைபெற்ற சில மணிநேரங்களில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியா ஏவிய பல ஏவுகணைகள் தென்கொரிய கடல் எல்லைக்குள் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 நடப்பு ஆண்டில் வடகொரியா ஏற்கனவே 3 முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ள நிலையில் இது 4வது ஏவுகணை சோதனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.