சிலியில் பற்றி எரியும் காடுகள் : பலர் உயிரிழப்பு!
சிலியின் வல்பரைசோவில் பரவிய காட்டுத்தீ காரணமாக குறைந்தது 112 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும், நிலைமையை தணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவே சிலி நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயாகக் கருதப்படுகிறது. இந்த காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கோடை விடுமுறையில் கடலோரப் பகுதிக்கு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தற்காலிக மருத்துவமனைகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் நிவாரணக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, அடுத்த சில மணித்தியாலங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ காரணமாக 3,000 முதல் 6,000 வீடுகள் அழிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.