அரசாங்கத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஹெய்டி மக்கள் ஆர்ப்பாட்டம்

#Protest #people #government #President #fire #Haiti
Prasu
9 months ago
அரசாங்கத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஹெய்டி மக்கள் ஆர்ப்பாட்டம்

ஹெய்டியில் ஜனாதிபதி அரியல் ஹென்ரியின் அரசாங்கத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

க்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி ஹென்ரியின் ஆட்சியில் தலைநகர் போர்ட் ஒவ் பிரின்சில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

தலைநகரில் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடங்கள் விரிவடைந்துள்ளன. தலைநகர் மட்டுமல்லாது, அருகில் உள்ள பிரதேசங்களுக்கு சட்டவிரோத குழுக்களின் நடவடிக்கைகள் பரவியுள்ளன.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதியில் இருந்த வாகனங்கள தீயிட்டு கொளுத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க ஹெய்ட்டி பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

மக்களின் போராட்டத்திற்கு இடையில் வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

 கடந்த 2021ஆம் ஆண்டில் ஹெய்ட்டியின் அன்றை ஜனாதிபதி ஜொவேனல் மோய்சி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து பிரதமராக பதவி வகித்த அரியல் ஹென்ரி ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!