அமெரிக்காவின் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழப்பு!

#SriLanka #Attack #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
அமெரிக்காவின் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழப்பு!

ஈரான் ஆதரவு போராளிகளின் மூத்த தளபதி கட்டாய்ப் ஹிஸ்புல்லா அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

ஈராக் தலைநகரின் கிழக்கு பகுதியில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

கட்டாய்புடன்,  ஹிஸ்புல்லாவின் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் இதன்போது கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஹிஸ்புல்லா முன்னெடுத்த தாக்குதலுக்கு இவர் தலைமை தாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.