பாகிஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குகளை எண்ணும் பணி
பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெற்றது.
வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி,பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான்கா னின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.
இதில் நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கட்சி 115 முதல் 132 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.