ஹமாஸ் அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு
#Prime Minister
#Israel
#War
#Hamas
#Netanyahu
#ceasefire
Prasu
9 months ago
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இதில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை முன்மொழிந்தனர்.
முதல் கட்டத்தில் 19 வயதுக்குப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள், முதியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் 1500 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை. அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும். நாங்கள் ஒரு முழுமையான வெற்றி பாதையில் இருக்கிறோம்.