மடகாஸ்கரில் கொண்டுவரப்பட்ட கொடூர சட்டம்

#government #Sexual Abuse #Law #Madagascar #ErectileDysfunction
Prasu
9 months ago
மடகாஸ்கரில் கொண்டுவரப்பட்ட கொடூர சட்டம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இதனிடையே, மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டு 600 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துவருவதால் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் இன்று மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!