அபுதாபியிலும் அறிமுகமாகும் UPI திட்டம்

#India #UAE #money #UPI #Transfer #AbuDhabi
Prasu
9 months ago
அபுதாபியிலும் அறிமுகமாகும் UPI திட்டம்

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. 

மேலும் யுபிஐ ரூபே கார்டு திட்டத்தை இருவரும் இணைந்து அறிமுகப்படுத்தினர். பிரதமர் மோடி துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் மற்றும் அதன் வளாகத்தை நாளை திறந்துவைக்கிறார்.

 2015-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேற்கொள்ளும் 7-வது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!