பொலிஸாரால் தேடப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்ட எஸ்டோனியா பிரதமர்
ரஷ்ய உள்துறை அமைச்சகத்தின் தரவுத்தளத்தின்படி, எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ், அதன் மாநிலச் செயலர் மற்றும் லிதுவேனியாவின் கலாச்சார அமைச்சர் ஆகியோரை ரஷ்ய போலீசார் தேடப்படும் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
‘வரலாற்று நினைவகத்தை இழிவுபடுத்தியதற்காக’ எஸ்டோனிய பிரதமரை தேடப்படும் பட்டியலில் சேர்த்தது ரஷ்யா. வெளிநாட்டு தலைவர் ஒருவரை தேடப்படும் பட்டியலில் சேர்ப்பது இதுவே முதல் முறை.
கல்லாஸ் உக்ரைனின் வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார், கியேவுக்கு இராணுவ உதவியை அதிகரிக்கவும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கவும் முயற்சிகளை முன்னெடுத்தார்.
சோவியத் இரண்டாம் உலகப் போர் வீரர்களின் நினைவுச்சின்னங்களை அகற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மாஸ்கோவை கோபப்படுத்தினார்.
போர் நினைவுச் சின்னங்களை இழிவுபடுத்துவதைத் தண்டிக்கும் ஷரத்துகளை உள்ளடக்கிய “நாஜிக்களின் மறுவாழ்வு” குற்றமாக்கும் சட்டங்களை ரஷ்யா கொண்டுள்ளது.