புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை விரைவில் நோயாளிகளுக்குக் பயன்படுத்த ரஷ்யா திட்டம்!
ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை விரைவில் நோயாளிகளுக்குக் கிடைக்கக்கூடியதாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "புதிய தலைமுறையின் புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகள் என்று அழைக்கப்படுவதற்கு நாங்கள் மிக அருகில் வந்துவிட்டோம்" என்று கூறினார்.
விரைவில் அவை தனிப்பட்ட சிகிச்சையின் முறைகளாக திறம்பட பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்த புட்டின் முன்மொழியப்பட்ட தடுப்பூசிகள் எந்த வகையான புற்றுநோயை குறிவைக்கும், என்பதை வெளியிடவில்லை.
இதேவேளை உலகின் பல நாடுகளும் நிறுவனங்களும் புற்றுநோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன.
2030 ஆம் ஆண்டுக்குள் 10,000 நோயாளிகளை சென்றடைவதை இலக்காகக் கொண்டு "தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைகள்" வழங்கும் மருத்துவ பரிசோதனைகளை தொடங்குவதற்கு ஜெர்மனியை தளமாகக் கொண்ட BioNTech உடன் கடந்த ஆண்டு UK அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.