சீனாவில் பண்டைய மருத்துவத்திற்காக அழிக்கப்படும் ஆப்பிரிக்க கழுதைகள்

#China #Robbery #Medicine #Ancient #Animal #Africa
Prasu
9 months ago
சீனாவில் பண்டைய மருத்துவத்திற்காக அழிக்கப்படும் ஆப்பிரிக்க கழுதைகள்

சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் ஒரு அரிய வகை பண்டைய மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் கழுதைகள் களவாடப்படுவது அதிகரித்துள்ளது.

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இளமையை நீட்டிக்கவும், தூக்கமின்மையை போக்கவும், குழந்தை பாக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் "எஜியாவோ" (Ejiao) எனும் மருந்திற்காக, கழுதைகளின் தோல்களை வேக வைத்து, அதில் பல பொருட்களை சேர்த்து பொடியாகவும், மாத்திரையாகவும், மருந்தாகவும் சீனாவில் விற்கப்படுகிறது.

இந்திய கிராமங்களில் கோழி, ஆடு, மாடு, எருமை வளர்ப்பில் பலர் ஈடுபடுவது தொன்று தொட்டு நடைபெறுகிறது.

அதே போல் பல ஆப்பிரிக்க நாடுகளில் குடிநீர், உணவு, பெரும் சுமை தூக்குவது உள்ளிட்ட பல வேலைகளுக்கு கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் 53 மில்லியன் கழுதைகளில் 3ல் 2 பங்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளன.

 கழுதை தோலுக்கு அதிக விலை கிடைப்பதால், அவற்றை பலர் களவாடுவது அதிகரித்துள்ளது. திருடு போகும் கழுதைகளின் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே கண்டறியப்படுவதாக கழுதைகளின் உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!