பாலி செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வரி அறவிடும் இந்தோனேஷிய அரசு

#Tourist #government #Indonesia #Visit #Vat #Bali
Prasu
9 months ago
பாலி செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வரி அறவிடும் இந்தோனேஷிய அரசு

உலகில் மிகவும் பிரபல்யமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக பாலி தீவு உள்ளது. மிகவும் குறைந்த செலவில் சுற்றுலாச் செல்லும் இடமாகவும் பாலி தீவு உள்ளது.

அவுஸ்திரேலியர்களால் அதிகம் விரும்பப்படும் இடமாக இத்தீவு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும், அந்நாட்டை சேர்ந்த ஒரு இலட்சம் பேர் இங்கு வந்துள்ளனர்.

இதற்கு அடுத்த இடங்களில், இந்தியா, சிங்கப்பூர், சீனாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலி தீவிற்கு சுற்றுலா செல்பவர்கள், 10 அமெரிக்க டொலர் சுற்றுலா வரி கட்ட வேண்டும் என இந்தோனேஷியாவின் அரசு அறிவித்துள்ளது.

தீவின் கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வரி விதிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

இந்த வரி கட்டுவதில் இருந்து உள்நாட்டு சுற்றுலா பயணிகள், ஆசியான் நாட்டை சேர்ந்தவர்கள், தூதரக விசா பெற்றவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 மற்ற நாட்டினர் ஆன்லைன் வாயிலாக அல்லது பாலி தீவு வந்ததும் விமான நிலையத்தில் வரி கட்ட வேண்டும் எனக்கூறியுள்ளது. கடந்த ஆண்டு இது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!