ஐரோப்பாவின் எதிர்காலம் அமெரிக்க தேர்தலில் தங்கியிருக்க முடியாது : பிரான்ஸ் ஜனாதிபதி திட்டவட்டம்!
உக்ரைன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலும் 10 வருடத்திற்கான பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பிரான்ஸுக்கு விஜயம் செய்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இதன்படி உக்ரைனுக்கு 03 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான மேலதிக யுத்த உதவிகளை வழங்கவும் பிரான்ஸ் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் எதிர்காலம் அமெரிக்கத் தேர்தலில் தங்கியிருக்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்சுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் உக்ரைன் ஜனாதிபதியும் ஜேர்மனியுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.