ஜாம்பியா நாட்டிற்கு 3.5 டன் நிவாரண உதவிகளை அனுப்பிய இந்தியா
காலரா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஜாம்பியா நாட்டிற்கு, இந்தியா சார்பில் 3.5 டன் எடையிலான நிவாரண உதவிகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜாம்பியாவில் கடந்த சில மாதங்களாக காலரா நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.
சுத்தமான குடிநீர் கிடைக்காததும், சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்படாததாலும், காலரா நோய் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
குடிப்பதற்கு மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு பொதுமக்கள் தற்போது சுத்திகரிக்கப்படாத அசுத்தமான நீரையே பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக காலரா நோய் தொற்று ஜாம்பியா மட்டும் இன்றி அதன் அண்டை நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் காலரா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 400-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனை அடுத்து ஜாம்பியா நாட்டில் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கால்பந்து மைதானம் ஒன்றை தற்காலிக மருத்துவ முகாமாக மாற்றி அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது