இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - இருவர் பலி
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.
காசா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இஸ்ரேல் படை குண்டுகளை வீசி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டி விட்டது
இந்த சூழ்நிலையில் இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை பகுதியில் கிழக்கு ஜெருசலேம் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே மர்ம நபர்கள் 3 பேர் காரில் சென்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் மர்ம நபர்கள் 2 பேரை பதிலடி தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர்.
மற்றொருவரை மடக்கி பிடித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரும் இஸ்ரேல் மேற்கு கரையையொட்டியுள்ள பாலஸ்தீன நகரமான பெத்லகேம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.