மட்டக்களப்பில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு!
#SriLanka
#Batticaloa
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு கிழக்கு பல்கலைக்கழக நல்லையா கேட்போர் கூடத்தில் இன்று (26.02) திகதி இடம் பெற்றது.
அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனன் இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான தெளிவூட்டல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
நவீன உலகில் இணையவழி குற்றச் செயல்கள் அதிகரித்து செல்லும் சூழ்நிலையில் மாணவர்களை அறிவூட்டி தம்மை தாமே பாதுகாப்பதற்கு தேவையான வழிகாட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் ஆலோசகர் வி.மணிராஜ் உள்ளிட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



