ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யாவின் மற்றுமொரு யுத்தக் கப்பலை அழித்த உக்ரைன்!
ரஸ்யாவின் மற்றுமொரு யுத்தகப்பலொன்றை அழித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
விசேட படையணியான குரூப் 13 இன் கடல்சார் ஆளில்லா விமானங்கள் கருங்கடலில் சேர்கேய் கொட்டொவ் என்ற 1300 தொன் ரஸ்ய ரோந்து கப்பலை தாக்கி அழித்துள்ளன என உக்ரைன் தெரிவித்துள்ளது.
கிரிமியாவை தென்மேற்கு ரஸ்யாவிலிருந்து பிரிக்கும் கேர்ச் நீரிணையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மகுரா விஐந்து கடல்சார் ஆளில்லா விமானங்களின் தாக்குதல்கள் காரணமாக ரஸ்ய கப்பலிற்கு பலத்த சேதம் ஏற்பட்டது கப்பல் தீப்பற்றி எரிந்தது என தெரிவித்துள்ள உக்ரைன் இராணுவம் இந்த கப்பல் மூழ்கிவிட்டதாக பின்னர் தெரிவித்துள்ளது.
உக்ரைன் கடற்படை உக்ரைனின் டிஜிட்டல் மாற்றத்திற்கான அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. முன்னரும் இந்த கப்பலை தாக்கினோம் ஆனால் இந்த முறை நிச்சயமாக அழித்துவிட்டோம் என உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் ஏழு கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர் ஆறுபேர் காயமடைந்;தனர் என தெரிவித்துள்ள உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு இந்த தகவல் எவ்வாறு கிடைத்தது என்பதை தெரிவிக்கவில்லை.
கடந்த சில மாதங்களாக உக்ரைன் ரஸ்யாவின் போக்கப்பல்களை இலக்குவைத்து அழித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருங்கடல் பகுதியிலேய இந்த தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.
இதேவகையான ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி பெப்ரவரியில் ரஸ்யாவின் தரையிறங்கு கலத்தினை உக்ரைன் தாக்கியிருந்தது.