வருடாந்திர ராணுவ பட்ஜெட்டை உயர்த்திய சீன அரசாங்கம்
வல்லரசு நாடுகளில் ஒன்றான இந்தியாவின் அண்டை நாடான சீனா, பொருளாதார சூழல் நலிவடைந்துள்ள நிலையிலும் வருடாந்திர ராணுவ பட்ஜெட்டை 7.2% அதிகரித்துள்ளது.
தற்போது அமெரிக்காவிற்கு அடுத்து மிக பெரிய தொகையை ராணுவத்திற்கு செலவிடும் நாடாக சீனா உள்ளது. இதனால், சீனாவின் ராணுவ பட்ஜெட் தொகை $230 பில்லியனுக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்த தொகை இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தொகையை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ராணுவ தரைப்படையில் 20 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
தைவானை தனது நாடாக கூறி வரும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. இப்பின்னணியில், ராணுவ பட்ஜெட்டில் இந்த ஒதுக்கீடு பார்க்கப்படுகிறது.
இந்திய கடல் (Indian Ocean) பகுதியில் ராணுவ மற்றும் அணு ஆயுத கட்டமைப்பை அதிகரிக்கும் நோக்கில் சீனா எடுத்திருக்கும் இந்த முடிவை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கிழக்கு லடாக் (eastern Ladakh) பகுதியில் ஏற்பட்ட சச்சரவு தொடங்கி 4 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.