மெக்சிகோவில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட கிளர்ச்சியாளர்கள் குழு!
மெக்சிகோவில் கிளர்ச்சியாளர்கள் குழுவொன்று அந்நாட்டு அதிபர் மாளிகையின் பிரதான கதவை உடைத்து வண்டியைக் கவிழ்த்துள்ளது.
2014 ஆம் ஆண்டில், 43 மாணவர்கள் காணாமல் போனதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலில் வெள்ளை நிற வண்டி ஒன்று மோதும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நேரத்தில், ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் அந்த வளாகத்தில் தினசரி செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடைகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டத்தில் சுமார் 100 பேர் திரண்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் இல்லத்தை சேதப்படுத்தியவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.