25 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வை வழங்க ஒப்புக்கொண்ட டொயோட்டா நிறுவனம்

#Salary #company #Agreement #vehicle #Workers
Prasu
8 months ago
25 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வை வழங்க ஒப்புக்கொண்ட டொயோட்டா நிறுவனம்

25 ஆண்டுகளுக்கு பிறகு தனது ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை வழங்க டொயோட்டா மோட்டார் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான டொயோட்டா, பானாசோனிக் மற்றும் நிசான் நிறுவனங்களும் ஊதியத்தை அதிகரிக்க தங்கள் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு முழுமையாக ஒப்புக் கொண்டுள்ளன.

மேலும், நிப்பான் ஸ்டீல் நிறுவனமும் தனது ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.

சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு இடையிலான சம்பளம் தொடர்பான வருடாந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜப்பானில், தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே பொதுவாக நல்ல புரிதல் இருக்கும், எனவே பேச்சுவார்த்தைகள் எப்போதும் நெருக்கடியின்றி முடிவடையும்.

கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள டொயோட்டா, ஊழியர்களின் மாதச் சம்பளத்தை 28,440 யென்களால் அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

 ஜப்பானில் பல துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இம்முறை அதிக சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!