புகுஷிமா அணு ஆலையை தற்காலிகமாக மூடிய ஜப்பான்

#government #Japan #Nuclear #closed #Fukushima
Prasu
8 months ago
புகுஷிமா அணு ஆலையை தற்காலிகமாக மூடிய ஜப்பான்

ஜப்பான் அரசாங்கம் புக்குஷிமா அணு ஆலையைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் புக்குஷிமா அணு ஆலையிலிருந்து கழிவுநீரை வெளியேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

புக்குஷிமா வட்டாரத்தின் வடகிழக்கில் 5.8 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அவ்வாறு செய்யப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு அந்தப் பகுதியைச் சுனாமி தாக்கியது. 

இம்முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரம் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட புக்குஷிமா Daiichi ஆலையிலோ புக்குஷிமா Daini ஆலையிலோ எவ்விதச் சேதமும் இல்லை என்று ஜப்பான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என குறிப்பிடப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!