தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா விபத்தில் சிக்கினார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா விபத்தில் சிக்கினார்!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கார் விபத்தில் சிக்கியுள்ளார். 

குடிபோதையில் சாரதி செலுத்திய கார் முன்னாள் ஜனாதிபதியின் காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், எனினும் அவருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

ஜுமாவின் எம்கே கட்சியின் மூத்த பிரதிநிதிகள் இந்த விபத்து விபத்து என அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அது திட்டமிட்டு நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை தென்னாபிரிக்க அதிபராக பதவி வகித்த 81 வயதான ஜேக்கப் ஜூமா, அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில், அவர் போட்டியிட முடியாது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று (28) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.