பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்!
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் பாஸ்போர்ட்டை அவரிடம் திருப்பித் தருமாறு அவரது வழக்கறிஞர்களின் கோரிக்கையை பிரேசிலின் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மே மாதம் ஒரு நிகழ்வுக்கு போல்சனாரோவை அழைத்ததாகவும், அவரது பாஸ்போர்ட்டை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் போல்சனாரோவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கவும், குற்றவியல் விசாரணைகளின் வளர்ச்சி மற்றும் குற்றவியல் சட்டத்தின் சாத்தியமான பயன்பாடு ஆகியவற்றிற்கு ஆபத்து ஏற்படுவதாக கூறி நீதிபதிகள் அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
2022 தேர்தல் முடிவுகளைப் புறக்கணித்து, நடத்தப்பட்ட போராட்டத்தில் போல்சனாரோவிற்கும் பங்கிருப்பதாக கூறி அவரது கடவுச்சீட்டை பெடரல் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.