இந்தோனேசியாவின் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து

#Weapons #Indonesia #Factory #Blast #Military
Prasu
1 month ago
இந்தோனேசியாவின் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட  வெடி விபத்து

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. 

இதில் அங்கிருந்த வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் கரும்புகை பல அடி உயரத்துக்கு எழும்பியது. உடனே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். 

ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உடனே அணைக்க முடியவில்லை. இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான வெடிமருந்துகளை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட பகுதியில் தீப்பிடித்தது என்றும் காலாவதியான வெடிமருந்துகளில் நிலையற்ற ரசாயனங்கள் உள்ளன. 

அதில் ஏற்பட்ட உராய்வுகள் மூலம் தீ பிடித்திருக்கலாம் என்றும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.