செவ்வாய் கிரகத்தில் தெரிந்தே உயிரை விடப்போகும் இளம் பெண்!
இதுவரை மனிதன் செல்லாத செவ்வாய் கிரகத்திற்கு புதிதாக மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில் 2033 ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் இந்த பயணத்தில் செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக சென்று சாதனை படைக்கப் போவது ஒரு பெண்.
அலிசா கார்சன் என்ற பதினேழு வயதுடைய மாணவி. இப்போதிருந்தே விண்வெளி பயணத்திற்கான பயிற்சிகளை அவர் ஆரம்பித்துவிட்டார்.
செவ்வாய்க்கிரகத்தில் தங்கி இருந்து அங்கு தண்ணீர் மற்றும் நுண்ணுயிர்கள் , மனிதன் வாழ்வதற்கு தேவையானவை இருக்கின்றதா என ஆராய்ச்சி செய்வதே இவரின் நோக்கமாகும்.
இதேவேளை அவர் செய்வாய்க்கிரகத்திற்கு சென்று அங்கு தங்கி இருந்து ஆராய்ச்சி செய்து விட்டு பின்னர் திரும்பி பூமிக்கு வருவதற்கான தொழில்நுட்பம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.
எனவே இவர் அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அங்கேயே உயிர்துறக்கும் ஒரு துர்பாக்கிய நிலையில் அலிசா கார்சன் என்ற பெண் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.