தொடரும் பதற்ற நிலை: இலங்கை பயணத்தை ஒத்திவைத்த ஈரான் ஜனாதிபதி!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு பயணம் செய்யும் திகதி இன் னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப் படவில்லை என வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.
உமா ஓயா பல்நோக் குத் திட்டத்தை மக்களி டம் கையளிக்கும் நோக் கில் ஈரான் ஜனாதிபதி எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந் தார். ஆனால், ஈரான் மற் றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்த பய ணம் ஒத்திவைக்கப்பட் டுள்ளது.
இதேவேளை, ஈரான் ஜனாதிபதியின் இலங் கைப் பயணத்தின் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கொழும் பில் உள்ள ஈரான் தூதுவரும் தெரிவித் துள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி ஈரான் ஜனா திபதி இலங்கைக்கு பயணம் மேற்கொள் ளா விட்டால் உமா ஓயா திறப்பு தினத்தை ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றத்தை தணிக்க ஐ.நாவும் மேற் குலக நாடுகளும் முயற்சிகள் மேற் கொண்டு வருகின்றன.
என்றாலும், இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலுக்கு பதிலடியை கொடுக்க ஈரான் தயாராகி விட்டது. இதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளும் உத்தரவுகளை இப்ரா ஹிம் ரைசி, அந்நாட்டு இராணுவத் தளபதிக்கு பிறப்பித்துள்ளார்.
இத னால் வளைகுடா நாடுகளில் பதற்ற மான சூழ்நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.