பிரித்தானியா முழுவதும் 45 உணவுப்பொருட்களை திரும்பப் பெறும் பல்பொருள் அங்காடிகள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
பிரித்தானியா முழுவதும் 45 உணவுப்பொருட்களை திரும்பப் பெறும் பல்பொருள் அங்காடிகள்!

பிரித்தானியா முழுவதும், சில பல்பொருள் அங்காடிகள் சாண்ட்விச் முதலான 45 உணவுப்பொருட்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளன.  

ஈ கோலை என்னும் ஒரு கிருமியின் பாதிப்பு இருக்கலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவிலுள்ள Asda, Morrisons மற்றும் Sainsbury’s முதலான பல்பொருள் அங்காடிகளுக்கு உணவுப்பொருட்களை விநியோகிக்கும் Greencore நிறுவனம், 45 உணவு வகைகளையும், Tesco மற்றும் One Stop ஆகிய பல்பொருள் அங்காடிகளுக்கு உணவுப்பொருட்களை விநியோகிக்கும் Samworth Brothers Manton Wood நிறுவனம், 15 உணவுப்பொருட்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.