பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான முதல் கருப்பின பெண்

#Election #Women #parties #leader
Prasu
1 year ago
பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான முதல் கருப்பின பெண்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.

இதில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது.

அதே சமயம், தொழிலாளர்கள் கட்சி 412 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி, 1832ம் ஆண்டுக்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி சந்தித்த மிக மோசமான தேர்தல் தோல்வி இதுவாகும்.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராபர்ட் ஜென்ரிக்கை தோற்கடித்து, கெமி படேனாக் வெற்றி பெற்றார்.

 இதன் மூலம் பிரிட்டனில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை கெமி படேனாக் பெற்றுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4