சுவிற்சர்லாந்தில் நடைபெறவிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ரத்து
#Switzerland
#Meeting
#America
#Lanka4
#Iran
#Agreement
#L4
Prasu
1 hour ago
சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் நடைபெறவிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே இணையவழியில் கையெழுத்திடப்பட்டதால், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை கைவிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இந்த விவகாரம் அடுத்தகட்டமாக தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் கையாளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஒரு மத்தியஸ்தராகக் கையெழுத்திட்டவர்களில் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே