உங்கள் சருமத்தில் வரட்சியும், எண்ணெயும் மாறிமாறி வருகிறதா? அப்போ இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க!
சருமத்தின் ஒரு பகுதி வறட்சியாகவும், மற்ற இடங்களில் எண்ணெய் பிசுக்கு போன்ற கலவையான சருமத்தை நம்மில் பலரும் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற கலவையான சருமம் இருக்கும்போது அதனை சரி செய்வதற்கு சிறப்பு பராமரிப்பு முறைகள் தேவை. சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் ஊட்டச்சத்துடன் வைத்துக்கொள்ள நீங்கள் பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கட்டுரையில் இயற்கையான முறையில் நமது சரும நிறத்தை சீரமைக்கக்கூடிய இயற்கையான ஃபேஸ் மாஸ்க் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல பண்புகள் உள்ளன. குறிப்பாக வறட்சியான சருமம் உடையவர்கள் தினசரி ஒரு வாழைப்பழத்தை சாப்பிடும் போது அது சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. அதே நேரத்தில் வெளிப்புறமாக வாழைப்பழத்துடன் எலுமிச்சை சேர்த்து பயன்படுத்தும் போது அது சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
என்ன செய்வது?
நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் பன்னீர் சேர்த்து கலக்கவும். நன்கு கலந்த பிறகு, இந்த கலவையை உங்கள் சருமத்தில் தடவி குறைந்தது 15 இல் இருந்து 20 நிமிடம் அப்படியே ஊற விடவும். அதன் பிறகு சுத்தமான நீரில் கழுவிக்கொள்ளவும். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்து வர கலவையான சருமம் நிறம் மாறி முகம் பொலிவு பெறும்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு தோலில் உள்ள பண்புகள் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. தயிரில் உள்ள பண்புகள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வறட்சி ஏற்படாமலும் தடுக்க உதவுகிறது. ஆரஞ்சு தோலை நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். உலர்த்தி வைக்கப்பட்ட ஆரஞ்சு தோலை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். ஆரஞ்சு தோலை அரைத்து பொடியாக்கிக் கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைக்கவும்.
என்ன செய்வது?
இந்த பொடியுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உங்கள் சருமத்தில் தடவி குறைந்தது 20 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். பின்னர் சுத்தமான நீரில் கழுவிக்கொள்ளவும். அடிக்கடி இவ்வாறு செய்து வர சருமத்தின் நிறம் மாறி சருமம் பளபளப்பாகவும் பொலிவாகவும் மாறும்.