மஞ்சளை தலைக்கு பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

#SriLanka
Dhushanthini K
2 months ago
மஞ்சளை தலைக்கு பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

மஞ்சள் பிரகாசமான நிறத்துக்கு காரணம் இதில் உள்ள குர்குமின் என்னும் பொருள். இது சருமம் முதல் உடல் ஆரோக்கியம் வரை அளிக்க கூடியது. அதே போன்று மஞ்சள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். முடி உதிர்வதையும் கட்டுப்படுத்தலாம். கூந்தல் வளர்வதை தடுக்கும் பொடுகு பிரச்சனைகளை தடுக்கவும் செய்யலாம். மஞ்சள் கூந்தலுக்கு செய்யும் நன்மைகள், அதை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது பார்க்கலாம்.

மஞ்சள் சமீப காலமாகவே இயற்கையான முறை முடி பராமரிப்பில் பிரபலமடைந்துவருகிறது. மஞ்சள் ஃபேஷியல், க்ரீம்கள், ஹேர் மாஸ்க், சிகிச்சை மற்றும் ஷாம்பு போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. 

மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக தலைமுடிக்கு அதிக நன்மை பயக்குகிறது. அதனாலே ஷாம்பு மற்றும் கண்டிஷனர்கள் முதல் முடிக்கு சிகிச்சை அளிப்பது வரை பெரும்பாலானவற்றில் இதை நீங்கள் பார்க்கலாம். முடிக்கு மஞ்சள் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை நீங்கள் பெறமுடியும்.

உடலில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் dihydrotestosterone (DHT) அளவை குறைக்க குர்குமின் உதவலாம் என்று சில ஆரம்ப கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை இரண்டுமே முடி உதிர்தலுக்கு காரணமான இரண்டு முக்கிய ஹார்மோன்கள் ஆண்ட்ரோஜெனடிக் அலோபிசியா என்னு ஆண்முறை வழுக்கைக்கு காரணமான இதை குறைப்பதன் மூலம் முடி உதிர்வதை தடுக்க உதவும். 

ஆய்வு ஒன்றில் புரோஸ்டேட் செல்களில் குர்குமின் இந்த ஹார்மோன்களை குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த dihydrotestosterone ஆனது புரோஸ்டேட் வளர்ச்சி மற்றும் மயிர்க்கால்களின் மினியேட்டரைசேஷன் ஆகிய இரண்டிலும் தொடர்பு கொண்டு ஆண்ட்ரோஜெனடிக் அலோபீசியாவை ஏற்படுத்துகிறது. மரபணு ரிதியாக ஆண் முறை வழுக்கைக்கு ஆளானால் இந்த dihydrotestosterone (DHT) ஆனது உச்சந்தலையில் இருக்கும் ஆண்ட்ரோஜன் ஏற்பிகளுடன் பிணைக்கப்பட்டு மயிர்க்கால்களில் முடி வளர்ச்சியை நிறுத்தலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஆனது இந்த dihydrotestosterone அளவை குறைக்க உதவுகிறது.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!