தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் உண்மையில் முடி உதிர்வு குறைகிறதா?

#SriLanka #Beauty
Dhushanthini K
2 months ago
தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் உண்மையில் முடி உதிர்வு குறைகிறதா?

கூந்தல் பராமரிப்பில் எண்ணெய் மசாஜ் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது . கோடையில் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதை விட குளிர்காலத்தில் பயன்படுத்துவது தான் அதிக பலனை தருகிறது. 

வறண்ட காற்றால் உச்சந்தலையில் வறட்சி ஏற்படாமல் தடுப்பதற்கு இது உதவுகிறது. உச்சந்தலையில் வறட்சி ஏற்படும் போது அது முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே உச்சந்தலை ஆரோக்கியத்தை பேணிக் காப்பதற்கு ஈரப்பதம் மிகவும் அவசியம். 

அந்த ஈரப்பதத்தை இந்த ஆயில் மசாஜ் மூலம் உங்களால் பெற முடியும். வழக்கமாக நாம் பயன்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் அல்லது நீங்கள் பயன்படுத்தக்கூடிய எண்ணெய்களையும் கூந்தலின் ஈரப்பதத்துக்கு பயன்படுத்தலாம். இந்த கட்டுரையில் குளிர்காலத்தில் கூந்தலுக்கு எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

குளிர்காலத்தில் போதுமான அளவு நீர் அருந்துவதை தவிர்க்கிறோம். இதனால் உடலில் ஏற்படும் வறட்சி உச்சந்தலை வரை பாதிக்கிறது. உச்சந்தலையில் இயற்கையாக ஈரப்பதத்தை தக்க வைக்க, தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். 

வறண்ட காற்றினால் ஏற்படும் நீர் இழப்பை தடுப்பதோடு எண்ணெய் வைப்பதன் மூலம் முடி உதிர்வு மற்றும் பொடுகு தொல்லை போன்றவற்றையும் தடுக்கிறது. குளிர் காலத்தில் வறண்ட காற்றில் வெளியே செல்லும்போது பனிப்பொழிவினால் உச்சந்தலைக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கும் இவை உதவுகிறது.

உச்சந்தலையில் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கு இது உதவுகிறது. மயிர் கால்களில் மசாஜ் செய்வதன் மூலம் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து சீராக நடைபெறுகிறது.

 இது முடி வளர்ச்சியை அதிகரித்து கூந்தல் உதிர்வை தடுக்கிறது. நல்ல வலிமையான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உச்சந்தலை மசாஜ் உதவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். தினசரி ஆயில் தடவி அதன் பிறகு சீப்பை வைத்து தலையில் சீவுவதன் மூலம் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த முடியும்.. குறைந்தது பத்து நிமிடம் தினசரி இவ்வாறு செய்து வந்தாலே முடி வளர்ச்சி மேம்படும்.


பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!