சருமம் ஆரோக்கியமாக இருக்க வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது!

#SriLanka #Beauty #Lifestyle
Dhushanthini K
2 months ago
சருமம்  ஆரோக்கியமாக இருக்க வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது!

சருமம் அழகாக கவர்ச்சியாக தெரியவேண்டுமானால் சருமத்தை நன்றாக பராமரிப்பதோடு அதன் பிரச்சனைகளை தவிர்க்கவும் தடுக்கவும் என்ன மாதிரியான பொருள்களை பயன்படுத்துகிறோம் என்பதையும் அறிய வேண்டும். 

ஏனெனில் அறியாமல் செய்யும் சில பழக்கவழக்கங்கள் தோல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்கின்றன. சிறந்த சரும ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவது போன்று என்ன பொருள்களை பயன்படுத்தகூடாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அதை தான் இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ள போகிறோம்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு 

ஹைட்ரஜன் பெராக்ஸைடு பருக்களை தடுக்கும் கட்டுப்படுத்தும் பொருள் என்று பலரும் அதை பயன்படுத்துவதுண்டு. இது முகத்தில் இருக்கும் பாக்டீரியக்களை கொல்லும். ஆனால் அதை சுயமாக வாங்கி தனித்து பயன்படுத்துவது தோல் செல்களை சேதப்படுத்தும். அதோடு சருமத்தில் சிராய்ப்புகள் வெட்டுகள் இருக்கும் போது சுத்தம் செய்வத்ற்கும் இதை பயன்படுத்தகூடாது. அதற்கு மாற்றாக சோப்பு மற்றும் வெற்று நீர் போதுமானது. அதோடு காயம் பட்ட இடத்தில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சருமத்தை எரிச்சலடைய செய்யலாம். பருக்கள் அதிகம் இருக்கும் போது சரும பராமரிப்பு மருத்துவர் பரிந்துரையின் பெயரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலவை சேர்த்த க்ரீம்களை எடுத்துகொள்ளலாம். சுயமாக எடுக்க கூடாது.

முகத்துக்கு தாய்ப்பால் பூச்சு நல்லதா?

 தாய்ப்பால் குழந்தைகளுக்கு உரிய ஊட்டச்சத்து என்பதில் மறுப்பில்லை. ஆனால் சிலர் பருக்களை குறைக்க, சருமத்தை மென்மையாக்க காய்ச்சாத பால் போன்று தாய்ப்பாலை பயன்படுத்துகிறார்கள். அதற்கேற்ப தாய்ப்பால் கொண்ட ஃபேஸ் மாஸ்க் கிடைக்கிறது. எனினும் தாய்ப்பாலில் இருக்கும் கொழுப்பு கலவையான லாரிக் அமிலம் கொண்ட பிற க்ரீம் வகைகள் பயன்படுத்தலாம். நீங்கள் வாங்கும் க்ரீம் மற்றும் லோஷன்களில் லாரிக் அமிலம் இருப்பதற்கான தயாரிப்பை வாங்கி பயன்படுத்தும் போது சரும மென்மையை பெறலாம் தாய்ப்பால் காயங்களை உண்டு செய்யாது என்றாலும் அதை தவிர்ப்பதே நல்லது.

முகத்துக்கு தேன் பயன்படுத்தலாமா?

 பழங்காலம் தொட்டே தேன் சரும காயங்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. பலரும் இதை முகப்பரு விரட்ட என்று பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது., தேன் கிருமிகளை அகற்றுவதிலும் அழற்சியை குறைப்பதிலும் செயல்படும் என்றாலும் அதிகமாக முழுமையாக செயல்புரியது. ஆய்வு ஒன்றில் தேன் சோப்பை விட சிறப்பாக செயல்படவில்லை என்று கண்டறிந்துள்ளது. அதே நேரம் நீங்கள் பயன்படுத்தும் தேனின் தரம் குறித்தும் அறிவது அவசியம். மனுகா தேன் சருமத்துக்கு பயன்படுத்தலாம். எனினும் இது கிருமி எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும்.

முகத்துக்கு எலுமிச்சை சாறு

 வைட்டமின் சி கொண்ட எலுமிச்சை சாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது சருமத்தை மென்மையாக்கும் வயதான தோற்றத்தை முன்கூட்டியே தரு கோடுகளை மென்மையாகும். ஆனால் எலுமிச்சை சாறு சிட்ரஸ் தன்மை கொண்டது. இதன் அமிலத்தன்மை முகத்தை எரிச்சலூட்டும். மேலும் இந்த எலுமிச்சை சாறை முகத்துக்கு பயன்படுத்தும் போது பழங்களில் இருக்கும் இராசயனங்கள் சூரிய ஒளியால் வெளிப்படும் போது சரும எதிர்வினையான பைட்டோஃபோடோடெர்மாடிடிஸ் என்னும் சொறி ஏற்படலாம். இது தானாக போகும் என்றாலும் சங்கடமானது. எலுமிச்சை சாற்றை நேரடியாக பயன்படுத்தாமல் நீர்த்து மிக மிகச்சிறிய அளவு அல்லது அவை சேர்த்த க்ரீம்களை பயன்படுத்தலாம்.

 முகத்துக்கு தேங்காயெண்ணெய்

 தேங்காயெண்ணெய் அழகான சருமத்துக்கு அமிர்தமானது என்றாலும் இதில் லாரிக் அமிலம் நிறைந்துள்ளது. அதே போன்று இது பருக்களுக்கு முகப்பருவுக்கு எதிரானது என்பதை நிரூபித்துள்ளது. ஆனால் இது 90% நிறைவுற்ற கொழுப்பு என்பதால் இது சருமத்துளைகளை அடைக்க செய்யும். அதனால் உடலில் விரும்பும் அளவுக்கு இதை பயன்படுத்தலாம். ஆனால் நீண்ட கால பயன்பாடு அதிக அளவு என்னும் போது இது கடுமையான வறட்சி அல்லது அரிக்கும் தோலழற்சியை தூண்டும் வாய்ப்பு உண்டு என்கிறது ஆராய்ச்சி ஒன்று. இயன்றவரை இதை முகத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!