இயற்கையான முறையில் ஹேர் கண்டிஷனர் தயார் செய்யும் முறை!

#SriLanka #Beauty #Lifestyle
Dhushanthini K
1 month ago
இயற்கையான முறையில் ஹேர் கண்டிஷனர் தயார் செய்யும் முறை!

தலை முடி பராமரிப்பு என்பது இன்றைய காலத்தில் ரசாயனம் கலந்த கலவைகளோடு ஒன்றிணைந்து விட்டது. அன்றைய காலத்தில் தலைக்கு சிகைக்காய் வைத்து தான் குளிப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ஷாம்புவை பயன்படுத்துகிறார்கள். ஷாம்புவை பயன்படுத்துவதால் முடி அதிக அளவில் வறண்டு போகிறது. அந்த வறட்சியை நீக்குவதற்காக கண்டிஷனர் என்று ஒன்றை பயன்படுத்துகிறார்கள்.

 இவை அனைத்திலும் கெமிக்கல் என்பது கலந்திருக்கிறது. இந்த கெமிக்கலை நாம் நம்முடைய தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் பல விதமான பக்க விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. 

இந்த பக்க விளைவுகளை நீக்குவதோடு இயற்கையான முறையில் நாம் ஒன்றிணைந்தோம் என்றால் நம்முடைய தலைமுடி என்பது ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இயற்கையான முறையில் ஹேர் கண்டிஷனரை எப்படி வீட்டிலேயே தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்

ஹேர் கண்டிஷனர் தயார் செய்யும் முறை

 தலைமுடி வறண்டு போகாமல் பட்டுப்போல மிருதுவாக பொலிவுடன் திகழ வேண்டும் என்பதற்காக தான் பலரும் ஹேர் கண்டிஷனர் என்ற ஒன்றை பயன்படுத்துகிறார்கள். இது தலைக்கு குளித்து முடித்த பிறகு தலைமுடி லேசான ஈரப்பதத்தில் இருக்கும் பொழுது உபயோகப்படுத்தக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அப்படி நாம் இதை உபயோகப்படுத்தும் பொழுது நம்முடைய தலைமுடி காய்ந்த பிறகு நன்றாக அழகாக மிருதுவாக பட்டுப்போல காட்சியளிக்கும். இதற்கு நாம் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் நம்முடைய வீட்டிலேயே எளிமையான முறையில் ஹேர் கண்டிஷனரை தயார் செய்யலாம். 

இதற்கு முதலில் நாம் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு ஆளி விதையை சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல் 3 டீஸ்பூன் வரும் அளவிற்கு எடுத்து சேர்க்க வேண்டும். இது இயற்கையான கற்றாழை ஜெல்லாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கடைகளில் விற்கக்கூடிய கெமிக்கல் கலக்காத கற்றாழை ஜெல் ஆக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

அடுத்ததாக இதனுடன் விளக்கெண்ணெய் என்று கூறக்கூடிய ஆமணக்கு எண்ணெய் இரண்டு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் ஏற்கனவே வடிகட்டி வைத்திருக்கும் ஆளி விதை ஜெல் இருக்கிறது அல்லவா? அதிலிருந்து நான்கு டீஸ்பூன் அளவிற்கு இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது வெண்மை நிறமாக மாறியிருக்கும். இதை ஈரம் இல்லாத பாட்டிலில் ஊற்றி வைத்து விட வேண்டும்.

 எப்படி நாம் தலைக்கு குளிக்கும் பொழுது ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துகிறோமோ அதே போல் இதையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை பயன்படுத்திய பிறகு மறுபடியும் தலைக்கு குளிக்க வேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை. தினமுமே இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 இதில் இருக்கக்கூடிய ஆளி விதை, கற்றாழை ஜெல், ஆமணக்கு எண்ணெய் அனைத்துமே நம்முடைய முடியை மிருதுவாகவும் அதே சமயம் உறுதியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதை நாம் தொடர்ச்சியாக உபயோகப்படுத்தும் பொழுது நம்முடைய தலைக்கு நல்ல ஒரு குளிர்ச்சி ஏற்பட்டு தலைமுடி உதிர்தல் பிரச்சனையும் தீரும். இந்த ஹேர் கண்டிஷனரை நாம் ஒரு வாரம் வரை வெளியே வைத்து உபயோகப்படுத்தலாம். 

குளிர்சாதன பெட்டியில் வைப்பதாக இருக்கும் பட்சத்தில் மூன்று வாரங்கள் வரை உபயோகப்படுத்தலாம். முடிந்த அளவிற்கு அவ்வப்பொழுது புதிதாக தயார் செய்து உபயோகப்படுத்துவது போல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அதன் பலன் என்பது நன்றாக இருக்கும். இதையும் படிக்கலாமே:கருந்திட்டுகளும் கருவளையமும் நீங்க இயற்கையிலேயே நமக்கு பல அற்புதமான பொருட்கள் இருக்கிறது. அந்த பொருட்களை முறையாக பயன்படுத்தினோம் என்றால் கடையில் விற்கக்கூடிய கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது.


பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!