சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 200 பேர் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்!

#SriLanka
Mayoorikka
1 month ago
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 200 பேர் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்!

இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 200 பேர் வெளிநாடுகளில் தங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

 ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்களில் 80 பேர் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட, திட்டமிட்ட குற்றக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வெளிநாடுகளில் தங்கியுள்ள குற்றக் குழு உறுப்பினர்களில் பலர் அந்தந்த நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

 சுற்றுலா சென்றுள்ள போர்வையில் அவர்கள் அங்கு தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களில் அதிகமாகத் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

 அந்தவகையில் குறித்த சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் தேவையான இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 அதற்காக விசேட குழுக்கள் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளார்கள் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!