ஒரே நாளில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!
#SriLanka
Mayoorikka
1 month ago
நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 7000 ரூபாயால் அதிகரித்து விற்பனையாகிய நிலையில், இன்று (12) மீண்டும் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 326,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 301,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,688 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
